Students Responsibility

மாணவர் கடமைகள்

1. பள்ளிக்குள் நுழைந்தவுடன் இது நமது பள்ளி, நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வர வேண்டும்.

2. பாட வேளையில் அவரவர் இடத்தில் இருந்து பணிகளைச் செய்ய வேண்டும். அங்கும் இங்கும் செல்லக் கூடாது.

3. குடிநீர், கைகழுவும் நீர்ப்பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

4. வகுப்பிற்கு வெளியே மரத்தடி நிழலில் அமரும் போது எந்தப் பொருளையும் கிழித்து எறியக்கூடாது.

5. ஒழுங்கீனமான புத்தகங்கள் படித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

6. வாரம் ஒரு முறை நகம் வெட்ட வேண்டும். நகத்திற்கு சாயம் பூசக்கூடாது. மாதம் ஒரு முறை முடி வெட்ட வேண்டும்.

7. பள்ளிச் சீருடையை இறுக்கமாக தைக்கக் கூடாது. கால் சட்டை, மேல் சட்டை உரிய உயரத்தில் இருக்க வேண்டும். தூய்மையாக அணிந்து வர வேண்டும்.

8. சீருடை கிழிந்தால் அதில் படங்களை ஒட்டி வரக் கூடாது. அதில் சிறு துணி வைத்து தைத்துதான் வரவேண்டும்.

9. தினமும் எண்ணெய் தேய்த்து தலை முடி படிய சீவி வர வேண்டும். காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

10. மதிய உணவுகளை உரிய இடத்தில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். தேவையற்ற உணவுப்பொருள்களை ஆங்காங்கே உள்ள தட்டில் போட வேண்டும். அல்லது கைகழுவும் இடத்தில் கால்வாய் அருகே ஓரமாகப் போட வேண்டும்.

11. பள்ளியிலோ வெளியிலோ ஆசிரியர்களைக் கண்டால் வணக்கம் தெரிவிக்க வேண்டும். அவரிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் போது நன்றி சொல்ல வேண்டும்.

12. வகுப்பில் இருபாலரும் சகோதர, சகோதரி மனப்பான்மையுடன் பழக வேண்டும். மிக அமைதியாகவும் இருக்க வேண்டும்.

13. மிங்கருவி பொத்தான்களை () மாணவர் தலைவன் (அல்லது) மாணவி அல்லது ஆசிரியரால் நியமிக்கப்படும் மாணவர்தான் இயக்க வேண்டும்.

14. வகுப்பு நேரங்களில் பெற்றோர்கள் மாணவ மாணவிகளைச் சந்திக்க அனுமதி இல்லை.

15. பெற்றோர்கள் மாணவர்களைத் தினமும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கவும், அவர்களுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்களையும், எழுதுகோல்களையும் வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சியுடன் கல்வி கற்க அனுப்பி வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

16. மாணவர்களின் தேர்ச்சி குறித்து அடிக்கடி ஆசிரியர்களைச் சந்தித்து தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக காலாண்டு, அரையாண்டுத் தேர்ச்சி குறித்து ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கும்படி பெற்றோர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

17. திரைப்பட நடிகை-நடிகர், விளையாட்டு வீரர்கள் உருவம் பொறிக்கப்பட்ட பேனா, நோட்டுக்கள் பயன்படுத்தக்கூடாது.

18. பள்ளி வளாகத்தில் செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு வருதல் கூடாது. வாட்ச், மோதிரம் மற்றும் தங்கஆபரணங்கள் அணிந்து வரக் கூடாது.

பேருந்து நிறுத்ததில் : மாணவர்கள் பின்புறம்தான் வரிசையாக ஏறவேண்டும். பின்புறம் ஏறிய பின் மையத்தை நோக்கி வரவேண்டும். படியிலோ அல்லது படியைச் சுற்றியோ நிற்கக் கூடாது. ஓட்டுநர், நடத்துநரிடம்  எதிர்த்துப் பேசக்கூடாது.

ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள்

1. நான் அதிகாலையில் எழுந்திருப்பேன்.

2. நான் தினந்தோறும் யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன்.

3. ஆங்கிலத்தில் தினந்தோறும் 1 முதல் 5 புதிய சொற்களுக்கு அகராதியை பயன்படுத்தி பொருள் அறிந்து கொள்வேன்.

4. நான் தினந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுதல் மற்றும் வாசித்தல் பயிற்சியினை மேற்கொள்வேன். மேலும் கணிதத்தில் அடிப்படைப் பயிற்சிகளையும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) மேற்கொள்வேன்.

5. நான் தினமும் மாதா, பிதா இருவரையும் வணங்கி நல்லாசியுடன் பள்ளிக்கு வருவேன்.

6. நான் உடல் தூய்மையுடனும், மனத்தூய்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் பள்ளிக்கு வருவேன்.

7. நான் பெரியவர்களிடமும் ஆசிரியர்களிடமும் அன்பும் மரியாதையும் உள்ள மாணவராக நடந்து கொள்வேன்.

8. நான் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றே படிப்பேன்.

9. நான் நல்ல சிந்தனை, பொறாமையின்மை, ஒற்றுமை, சகோதர உணர்வுடன் விளங்குவேன்.

10. நான் எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவேன்.

11. நான் உடல் ஆரோக்கியம் பெற நல்ல உடற்பயிற்சி, தியானம், இறைவழிபாடு போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவேன்.

12. நான் கடமையுணர்வு தவறாத மாணவனாகவும், வீட்டிற்கும் நாட்டிற்கும் உழைப்பேன்.

13. நான் சாலை விதிகளைக் கடைபிடிப்பேன்.

14. நான் என் உயிர்மூச்சு உள்ளவரை நல்ல வளமான சமுதாயம் உருவாக்கப் பாடுபடுவேன்.

15. நான் என்னுள் இருக்கும் தனித்திறமையை உடனுக்குடன் வெளிப்படையாக உண்ர்த்துவேன்.