ஒழுங்குமுறை
1. பள்ளி வேலை நேரம் முற்பகல் 8-30 மணி முதல் பிற்பகல் 4-15 மணி வரையுமாகும்.
2. தினமும் காலை 8-35 மணி முதல் 9-05 மணி வரை காலை மேற்பார்வைப் படிப்பு உண்டு.
3. காலை 8-35 மணிக்கு மணி அடித்தவுடன் மாணவர்கள் காலைப் படிப்புக்காக வகுப்பறைகளிலோ, மர நிழல்களிலோ உட்கார்ந்து படிக்கத் தொடங்க வேண்டும். 9-05 மணி வரை அமைதியாகப் பாடங்களைப் படிக்க வேண்டும்.
4. 9-15 மணிக்கு இறைவணக்கத்திற்கு மணி அடிக்கப்படும். வகுப்பு மாணவர் தலைவனைப் பின்பற்றி மாணவ மாணவிகள் வரிசையாகச் செல்ல வேண்டும். இறைவணக்கத்திற்குப் பின்னரும் வரிசையாக வகுப்புக்குச் செ ல்ல வேண்டும்.
5. எல்லா நாட்களிலும் பள்ளிச் சீருடை அணிந்தே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
6. வாரத்தின் முதல் வேலை நாளன்று நமது தேசியக்கொடி ஆசிரியர் ஒருவரால் ஏற்றப்படும்.
7. ஒவ்வொரு நாளும் குறளும்-செய்தியும், வினாவும்-விடையும் வாசிக்கப்படும். பொது அறிவுக்கருத்தும் வழங்கப்படும். கொடியேற்றும் நாளன்று ஆசிரியர் அறிவுரை வழங்குவார். மாணவர்கள் இதனை கவனமுடன் கேட்டல் வேண்டும். பொது அறிவினை வளர்ப்பதுடன் அவற்றைத் தேவையான இடங்களில் கையாளவும் வேண்டும்.
8. மாணவர் வருகை எடுக்கும் போது, வகுப்பில் இல்லாத மாணவனுக்கு வருகை கிடையாது. வகுப்பு வேளையில் வெளியே செல்ல வேண்டியிருப்பின், ஆசிரியர் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
9. ஒவ்வொரு பாடவேளை (Period) இடையிலும் மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
10. அடுத்த வகுப்பறைக்கு எந்த மாணவனும் செல்லக் கூடாது. இடைவேளை நேரங்களில் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டோ, நின்று கொண்டோ இருத்தல் கூடாது.
மாணவர்களுக்கான விதிமுறைகள் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
1. பள்ளிச் சீருடைகள் அரசு அங்கீகரித்த வடிவில் மட்டுமே இருக்க வேண்டும்.
2. எந்தவிதமான குறிப்புகளை வெளிப்படுத்தும் அடையாளங்கள் இருக்கக் கூடாது. சட்டையின் நீளம் உரிய வடிவில் இருக்க வேண்டும்.
3. சட்டை பட்டன்கள் அனைத்தும் முழுமையாக போட்டிருக்க வேண்டும்.
4. மாணவரின் தலைமுடி சரியான முறையில் ஒரே சீராக வெட்டப்பட்டு, நன்கு படியும்படி தலை சீவி பள்ளிக்கு வர வேண்டும்.
5. மாணவர் கைகளில் ரப்பர் பேண்டு, வளையம், கயிறு, காதுகளில் கம்மல், கடுக்கன், கழுத்தில் செயின் போன்ற எந்த அணிகலன்களும் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது.
6. உடலில் எந்த இடத்திலும் பச்சை குத்தி வரக்கூடாது. பள்ளி துவங்க 15 நிமிடத்திற்கு முன்பாக பள்ளிக்குள் வந்துவிட வேண்டும்.
7. பள்ளிக்கு வந்த பிறகு, பள்ளி நேரம் முடியும்வரையும் மதிய உணவு வேளையிலும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியெ செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
8. அரசின் சத்துணவுத் திட்டத்தில் சேராத மாணவ , மாணவியர்கள் மதிய உணவை காலை பள்ளிக்கு வரும்போதே எடுத்து வந்து விட வேண்டும்.
9. பள்ளியின் மேசை, நாற்காலி உள்ளிட்ட எவ்வித சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடாது.
10. ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசிக் கொள்ளக் கூடாது. பள்ளிக்கு வெளியே கூடி பேசுவது, விளையாடுவது கூடாது. மீறினால் போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
11. மாணவர்களின் பெற்றோர் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர் தவிர வேறு எவரும் பள்ளிக்குள் வர அனுமதி கிடையாது.
12. பள்ளி நேரம் முடிந்தவுடன் உடனடியாக மாணவ, மாணவியர்கள் வீட்டிற்கு சென்று விட வேண்டும்.
13. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
14. மாணவ, மாணவியர்கள் கழிப்பிடங்களை தூய்மையாக பயன்படுத்த வேண்டும். பொது இடங்களை அசுத்தப்படுத்தக் கூடாது.
15. எவ்வித தேவைக்காகவும் கூரிய பொருட்களான கத்தி, ஊசி, பிளேடு போன்ற பொருட்களை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது.